???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  22:28:08 IST

ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் மனிதஉரிமை ஆர்வலரான முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் மாயமானார். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.நா மனிதஉரிமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அதில், மனிதஉரிமை விதிமீறல்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று மனிதஉரிமை கவுன்சிலின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், முகிலன் மாயமானது குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்த விவரங்களை அளிக்குமாறு மனிதஉரிமை கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

முகிலன் சமாதியாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்றும், அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.விசாரணை நடத்தப்படாமல் இருந்தால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...