???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முருகன், சாந்தன்,பேரறிவாளனின் தூக்குதண்டனை, சட்டத்திற்கு விரோதமானது - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி.

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   25 , 2013  00:32:57 IST

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு கே.டி. தாமஸ் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில்  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் கூறியபோது “நீண்ட காலத்துக்குப் பின், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது ,ராஜீவ் கொலை வழக்கில், 22 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள அவர்களின் வழக்கை மறு ஆய்வு செய்யாமல் தூக்கிலிடுவது, அரசியலமைப்பு சட்டத்தின்படி சரியானதல்ல.

 

2010ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. சின்ஹா தலைமையிலான அமர்வு, பாரியார் வழக்கில், "மரண தண்டனை விதிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட நடத்தையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நாங்கள் தண்டனை விதிக்கும் போது, குற்றவாளிகளின் இயல்பு, நடத்தை ஆகியவற்றை பரிசீலிக்கவில்லை. ஆகவே, அரசியலமைப்புச் சட்டம் 22வது பிரிவின் படி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது சட்டத்துக்கு எதிரானது. நீண்டகாலமாக சிறையில் உள்ள அவர்களுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானதல்ல என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...