???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உயரே( மலையாளம்) : சினிமா விமர்சனம்

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  07:06:26 IST


Andhimazhai Image
அழகு என்றால் என்ன? ஏன் சில வேலைகளுக்கு மட்டும் அழகு என்ற தகுதி இருக்கிறது? ஆகிய கேள்விகளை உரக்க எழுப்புவதன் மூலம் புதிய உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறது ’உயரே’  என்ற மலையாள படம்.

 பார்வதி, அனார்க்கலி மரிக்கர், ஆசிப் அலி, டொவினோ தாமஸ், சிர்த்திக் லால், பிரேம் பிரகாஷ், அனில் முரளி ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

பல்லவி ரவீந்திரன் என்ற பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் பார்வதி. இப்பாத்திரத்தின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை ஒன்றாக்கி ஒரு திரைப்படமாக தந்திருக்கிறார் இயக்குநர் மனு அசோகன்.  படத்தின் திரைக்கதையை பாபி மற்றும் சஞ்சய் எழுதியிருக்கின்றனர்.

விமானப்பணிப்பெண் ஆகவேண்டும் என்ற லட்சியத்தால் ஈர்க்கப்பட்ட பல்லவி ரவீந்திரன் அதை அடைவதற்கு செய்யும் உழைப்பு, அப்படி லட்சியம் கைகூடும் நேரத்தில் தான் உயிராக நேசித்தவரே அதற்கு தடையாக இருக்கும் நிலை, அந்த தடையைத் தாண்டிச் செல்லும்போது அவருக்கு ஏற்படும் தாக்குதல். அந்த தாக்குதலுக்கு அவர் ஆற்றும் எதிர்வினை. இதுவே படத்தின் கதை.

இந்த திரைப்படம் காதலை வேறு ஒருகோணத்தில் அணுகி உள்ளது. காதலில் விழுந்த பெண் தன் இலட்சியத்தை பற்றியோ தன் கனவுகளைப் பற்றியோ எந்த அளவுக்கு காதலனுடன் பகிர்ந்துகொள்கிறாள்? அதை நிறைவேற்ற எந்த அளவுக்கு ஆணாதிக்கப் பார்வை கொண்ட காதலன் அனுமதிக்கிறான் ஆகிய எல்லைகளை விவாதிக்கிறது இப்படம்.

இந்த திரைப்படத்திலும் சாதாரண ஆதிக்க ஆண் என்ன செய்வானோ எப்படி நடந்துகொள்வானோ அப்படித்தான், காதலன் அரவிந்த் (ஆசிப் அலி) நடந்துகொள்கிறான். அரவிந்த் பாத்திரம் சமூக எதார்த்தத்தின் பிரதிபளிப்பு. ’தன்னை வேண்டாம் ’என்று ஒருவர் ஏன் முடிவெடுக்கிறார் என்பதை ஆராயாமல்,  அவரை எப்படி பழிவாங்க முடியும் என்று நினைப்பதில் ஆண்களும் பெண்களும் சமமாகவே இருக்கிறார்கள்.

அரவிந்த் கதாபாத்திரத்தில் ஆலிப் அலி கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சற்று அதிகமாக அவர்  நடித்திருந்தால் அது ’சைக்கோ காதலன் பாத்திரமாகக்கூட  மாறியிருக்கும்.

நம் சமூகம் எது அழகு என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை இந்த கதை அழுத்தமாக பேசியிருக்கிறது. 5 நட்சத்திர விடுதியின் ரிசப்ஷனிஸ்ட்-க்கு  ஏன் அழகாக இருக்கவேண்டும்.  எச் ஆர் அல்லது முக்கியமான உயர்பதவிகளுக்கு அழகு முக்கிய அம்சமாக ஏன் பார்க்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் என்ன தேவை? என்ற கேள்வியை இத்திரைப்படம் நம் முன்பு வைத்திருக்கிறது.

 நேர்த்தியான நடிப்பை பார்வதி வெளிப்படுத்தி இருக்கிறார். ஒட்டுமொத்த பெண்களின் வலியை தனது நடிப்பால் கச்சிதமாக திரையில் கொண்டு வர அவரால் எப்படி முடிந்தது என்ற கேள்வி இயல்பாகவே எழும்.

மலையாள சினிமாவில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் கதைகள் வெளியாவதை குறைக்கும் முயற்சிகளில் பார்வதி உறுப்பினராக இருக்கும் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. 

இந்த அமைப்பின் முக்கிய அங்கமாக பார்வதி இருப்பதால்தான், இதுபோன்ற படத்தை தேர்வு செய்து அவரால் நடிக்கமுடிகிறதோ என்று தோன்றுகிறது. பார்வதிக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். முக்கியமாக இப்படம் எழுப்பும் கேள்விகளுக்காகவும்தான்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...