???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வாகன அபராதத் தொகையை குறைக்கிறது தமிழக அரசு!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   11 , 2019  23:56:55 IST

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராத உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. மேலும் சில மாநில அரசுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளன. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி, எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைத்துள்ளன.

தினமும் வாகன ஓட்டிகள் - போலீசார் இடையே தகராறு ஏற்படுவதால், ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கான அபராத தொகையை குஜராத் அரசு ரூ.1000-ல் இருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதைப்போல லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற நிலையில், இரு சக்கர வாகனம் ஓட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரமாகவும், 4 சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.3 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் அமல்படுத்தப்படாத நிலையில், அபராதத்தொகையை குறைத்து அதற்கான சட்டத்திருத்தத்தை செய்த பின்னர், அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அடுத்த வாரம் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...