![]() |
மூடீஸ் நிறுவனம் அதிர்ச்சி தகவல்!Posted : வெள்ளிக்கிழமை, நவம்பர் 08 , 2019 03:09:59 IST
அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தர நிறுவனமான ’மூடீஸ்’ இந்தியாவுக்கான தரக்கண்ணோட்டத்தை எதிர்மறை என்று அறிவித்துள்ளது.
ஏற்கனவே ’நிலையானது’ என்று இந்தியாவுக்கான தரக்கண்ணோட்டத்தை மூடீஸ் அறிவித்திருந்தது. அத்துடன் இந்திய நாணய மற்றும் பத்திரங்களுக்கான மதிப்பையும் உயர்வாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் இந்த நிறுவனம் தன்னுடைய தர அறிவிப்பில் இந்தியாவுக்கான தரக்கண்ணோட்டத்தை எதிர்மறை என்று அறிவித்துள்ளது.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றி உள்ள இந்திய நிதியமைச்சகம், “ அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்த பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. கொள்கை முடிவுகளை இதுதொடர்பாக எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இந்தியா தொடர்பாக நேர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்கி முதலீடுகளை ஈர்க்கும். உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்துவருகிறது. நாட்டின் நிலை மாறாமல் உள்ளது” என்று கூறியுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியம் சமீபத்திய அறிக்கையில் இந்திய பொருளாதாரம் 2019 இல் 6.1 சதவிகித வளர்ச்சியை அடைய உள்ளதாகவும் 2020 இல் 7 சதவிகிதமாக அது வளரும் என்றும் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய கிராமப் புறங்களில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் உருவாகி உள்ள கடன் நெருக்கடி ஆகியவை. பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று மூடீஸ் நிறுவனம் கருதுவதால் இந்தியா பற்றிய தன்னுடைய தரக்கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது.
|
|