???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனா: மனுசன் பதுங்க, குரங்குகள் நீச்சல் குளத்தில் ஆட்டம்!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   13 , 2020  06:09:30 IST


Andhimazhai Image
மனுசப்பயலுக குளிச்சிட்டே இருக்கானுகளே ஸ்விம்மிங் பூலிலே.. நாம என்னிக்கு அதில் குளிக்கிறது என்று நம் மூதாதையரான குரங்குகள் நினைத்துக்கொண்டிருக்கும் போலிருக்கிறது, கொரோனா ஊரடங்கில் மக்கள் வீடுகளில் பதுங்கிவிட்ட நிலையில் குடியிருப்புகளில் இருக்கும் நீச்சல் குளங்களைச் சீந்துவாரில்லை. ஆகவே இந்த குளங்களை பல ஆண்டுகளாகக் கவனித்துவரும் ஒரு குரங்குக் கூட்டம், மும்பை குடியிருப்பு ஒன்றில் களத்தில் குதித்தே விட்டன. அவை சுவர்களில் ஏறி குடியிருப்பில் நுழைந்து நீச்சல் குளத்தில் ஆட்டம் போடுகின்றன.
 
 
ஆளில்லாத பால்கனி ஒன்றில் இருந்து பார்க்கும் குரங்கு ஒன்று மெல்ல சுவரில் தாவி இறங்கி வந்து உயரத்தில் இருந்து தண்ணீருக்குள் தொபுக்கடீர் எனக் குதிக்கிறது! ஆகா என்ன ஆனந்தம்! தூய்மையான தண்ணீருக்குள் ஆழத்தில் முங்கு நீச்சல் போட்டு ஏறிவந்து உட்காரும் குரங்கு, மெல்ல ஓய்வெடுத்து மீண்டும் நீந்துகிறது!
 
 
தாரே ஜமீன் பார் படத்தின் நடிகையான டிஸ்கா சோப்ரா, குரங்குகளின் நீச்சல் குள அட்டகாசத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். மும்பையில் போரிவெலி பகுதியில் ஒரு குடியிருப்பின் நீச்சல் குளத்தில் இது நடந்துள்ளது. “பல ஆண்டுகளாக மனிதர்கள் குளிப்பதைப் பார்த்து, ஒரு வாய்ப்புக்காக இந்த குரங்குகள் காத்திருக்கக்கூடும்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இதே வீடியோவை ரவீனா டாண்டனும் பகிர்ந்து, “குரங்குகளின் கொண்டாட்டம்” என்று கூறி உள்ளார்!
ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரால் பார்க்கப்பட்டு கருத்துகள் குவிந்துவருகின்றன.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...