???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

யோகாசனம்: அனிமேஷன் மோடி!

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   11 , 2018  05:00:34 IST


Andhimazhai Image
யோகாசனத்தைப் பிரபலபடுத்துவதுவதில் பிரதமர் மோடியின் ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்போது பல யோகாசனங்களை மோடியின் அனிமேஷன் உருவம் செய்து காண்பிக்கும் காணொளிகள் பிரதமரால் வெளியிடப்பட்டுள்ளன. 
 
 
ஐக்கிய நாடுகள் பொது சபையில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உலக யோகா தினம் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். “ யோகா என்பது இந்தியா உலகுக்கு அளித்த, உடலையும் மனதையும் இணைக்கும் அரிதான ஒரு பயிற்சிமுறை. யோகா இயற்கைக்குக்கும் மனிதனுக்குமான தொடர்புகளைப் புதுப்பிக்கிறது. சிந்தனையைச் சிதறடிக்கும் எண்ணங்களை ஒரு முகப்படுத்தி நம்மை வலிமையானவர்களாக்குகிறது.’’ இதுதான் ஐக்கிய நாடுகள் பொது சபையில் பிரதமர் மோடி யோகா பற்றிப் பேசிய பேச்சின் சாரம். முதன்முதலாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்ட நாள் 21 ஜூன் 2015. ஆனால் இது இந்திய அளவில் பல கடுமையான எதிர்வினைகளை உண்டாக்கியது. ஆனாலும் இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல்  யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் யோகா செய்முறைகள் அனிமேஷன் வீடியோக்களாக வெளியிடப்பட்டன. நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதாஸ்தனா என்னும் யோகா செய்முறை வீடியோ ஒன்றை பகிர்ந்த மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு எழுதினார்.  “பதாஸ்தனா யோகாவை தினமும் செய்பவர்கள் ஆரோக்கியமான உடலையும் அமைதியான மனதையும் பெறுவார்கள் என்பது உறுதி. இது தவிர்த்து வேறென்ன வேண்டும் ஒருவருக்கு?’’  
 
 
மோடியின் ஆஸ்தான யோகாசன செய்முறைகளின் வீடியோ இணைப்பு கீழே: 
 
 
 
 
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...