???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   10 , 2019  22:23:18 IST

ஆந்திராவிலிருந்து விமானம் மூலம், கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடியை விமானநிலையத்தில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்றடைந்தார். திருப்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப் பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
 
இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி,  ‘இந்தியா அனைத்திலும் தன்னிறைவு பெற வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் 2 பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைவதால் வேலைவாய்ப்பு அதிகமாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற 50 ஆண்டு கோரிக்கையை நமது மத்திய அரசு நிறைவேற்றியது.
 
சாகர் மாலா திட்டத்தின் மூலம் கடற்கரைப் பகுதிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டில் சாலைகள் அமைக்கும் வேகம் இரு மடங்காகி உள்ளது. உலகத்திலேயே இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என்று பேசியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...