???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜே.அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை!- மருத்துவமனை 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   20 , 2019  21:37:56 IST

குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சூரத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதலாவது தனியார் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற்சாலையை இன்று அவர் திறந்து வைத்தார்.
 
தொடர்ந்து சில்வாஸா, தாதர், நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியின்போது 5 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதாகவும், தற்போது தனது ஆட்சியில் ஒன்றே கால் கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணி எனக்கு மட்டும் எதிரானதல்ல, தேசத்துக்கும் எதிரானது. அவர்கள் அனைவரும் கொல்கத்தாவிலிருந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிடுகின்றனர்.
 
ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமடைய செய்துள்ளன. இதன் காரணமாகத்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலைவர்கள் கொல்கத்தாவில் இன்று கூடியுள்ளனர். பொதுமக்களின் வரிப் பணத்தை அவர்கள் கொள்ளை அடிப்பதை நான் தடுத்தேன். இதனால், அவர்கள் என் மீது கோபமாக இருப்பது இயல்பானதுதான்.
 
அக்கட்சிகளுக்குள் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், அதற்குள் எந்த தலைவருக்கு என்ன பதவி என்று அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றார் மோடி.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...