???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குடிசையிலிருந்து வந்து மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற பிரதாப் சாரங்கி

Posted : வெள்ளிக்கிழமை,   மே   31 , 2019  08:24:22 IST


Andhimazhai Image

ஒரிஸாவின் மோடி என அழைக்கப்படும் பிரதாப் சந்திர சாரங்கி, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். அவருக்கு சிறுகுறு தொழில்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

மூங்கில் கீற்றுகளால் வேயப்பட்ட பழைய குடிசையில் வசிக்கும் பிரதாப் சாரங்கி, அவரது எளிமைக்காகவும், செயல்பாடுகளுக்காகவும்தான் இவ்வாறு பரவலாக பேசப்படுகிறார். இவருக்கு எதிராக களம் கண்டவர்கள் விலை உயர்ந்த கார்களில் சென்று பிரசாரம் செய்துகொண்டிருக்க, இவரோ மிதிவண்டிகளையும், ஆட்டோக்களையும் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

பஜ்ரங் தளம் அமைப்பின் ஒரிஸா மாநில தலைவராக இருந்த பிரதாப் சாரங்கி, பின்னர் நிலகிரியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பலசோர் மக்களவைத் தொகுதியில், பிஜு ஜனதா தளத்தின் பலம்பொருந்திய முன்னாள் மக்களவை உறுப்பினர் ரபிந்திர குமார் ஜெனாவை வீழ்த்தி வென்றிருக்கிறார்.

மிதிவண்டியில் சென்று தொகுதி மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தியது, எளிமையான அணுகுமுறை போன்றவை ஒரிஸாவின் மோடி எனும் பட்டத்தை பிரதாப் சாரங்கிக்கு வழங்கியது.பழங்குடியின மக்கள் வாழ்விடங்களில் 100 ஒற்றை ஆசிரியர் பள்ளிகளை உருவாக்கியது, மது மற்றும் ஊழலுக்கு எதிரான இயக்கம் போன்ற இவரது செயல்பாடுகளும் மக்களுக்கு பிரதாப் சாரங்கி மீது நம்பிக்கை ஏற்பட முக்கிய காரணங்களாக இருந்தன. இவற்றின் உச்சமாக மத்திய அமைச்சர் பதவி பிரதாப் சாரங்கிக்கு கிடைத்திருக்கிறது.

பிரதாப் சாரங்கி தமது குடிசை வீட்டிலிருந்து வெளியேறும் படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியான பிறகு, அவர் இப்போது பிரபலமடைந்திருக்கிறார்.
 


English Summary
Modi of odisha became popular by social websites

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...