???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தார்கொள்முதல் வழக்கு : நான்கு வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 0 கர்நாடகத் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: வைகோ அறிக்கை! 0 டெங்குவை சுகாதாரப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 ராஜினாமா செய்யவில்லை: திருநாவுக்கரசர் மறுப்பு 0 பெங்களூருவில் மெர்சல் திரையிடல் நிறுத்தம் 0 பணிமனை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.7.5 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் அறிவிப்பு 0 போக்குவரத்து கழக கட்டிட விபத்து: அமைச்சர் ஓ. எஸ். மணியனை முற்றுகையிட்ட மக்கள் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் 0 சுகாதார சீர்கேட்டால் உயிரிழப்போர் எண்ணிக்கை: இந்தியாவுக்கு முதலிடம்! 0 'மெர்சல்' வசூல் சாதனை! 0 மெர்சல் பட வசனங்களில் உண்மையில்லை: பொன்.ராதகிருஷ்ணன் 0 நிலவேம்பு கசாயத்தை ஆய்வு செய்திருக்கிறோம்: சுகாதார செயலர் 0 "நடிகர் கமல்ஹாசன் மருத்துவரா? விஞ்ஞானியா?" 0 அரசு போக்குவரத்து கழக கட்டிடம் இடிந்து விபத்து: 8 பேர் பலி 0 முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

புதிய ஆண்டை உத்வேகத்துடன் தொடங்குவோம்:பிரதமர் மோடியின் புத்தாண்டு உரை!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   01 , 2017  22:08:20 IST


Andhimazhai Image
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, புத்தாண்டில் வங்கிச் சேவைகள் சீராகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவை புதிதாக கட்டமைக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ரொக்கமற்ற பரிவர்த்தனையே சிறந்தது என்றும் குறிப்பிட்டார்.வங்கிச் சேவைகள் விரைவில் சீராகும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். உரையின் சில முக்கிய அம்சங்கள்...
 
ரூபாய் நோட்டு ஒழிப்பால் பயங்கரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளது. நேர்மையானவர்களை அரசு ஊக்குவிக்கும்; நேர்மையற்றவர்களை அரசு திருத்தும். காமராஜர் உயிரோடு இருந்திருந்தால், மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை பாராட்டியிருப்பார்.
 
புதிய ஆண்டை உத்வேகத்துடன் தொடங்குவோம்.
 
நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்படும். 
 
அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் பெரிய மனிதர்கள் மற்றும் அதிகாரிகளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது. கருப்புப் பணத்தை மாற்ற உதவிய வங்கி அதிகாரிகளை விட்டுவைக்க மாட்டோம்.
 
காந்தி மறைந்துவிட்டாலும், அவர் காட்டிய வழியில் மக்கள் பயணிக்கின்றனர். உண்மை, நேர்மை ‌இருந்தால் வெற்றியும் வளர்ச்சியும் கிடைக்கும்‌. அரசு எடுத்த நடவடிக்கை வருங்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். 
 
கர்ப்பிணிகளுக்கான சிறப்பு திட்டத்தையும், ஏழைகள் வீடு கட்ட வாங்கும் கடனுக்கு வட்டி சலுகைகள் பற்றிய அறிவிப்பையும் மோடி வெளியிட்டார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...