அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது - மோடி

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   25 , 2021  23:52:56 IST

கோவை, கொடிசியாவில் நடைபெறும்  பாஜக பொதுக்கூட்டத்தில் பிரசாரத்தை  தொடங்கினார் பிரதமர் மோடி. வெற்றிவேல், வீரவேல் என தமிழில் கூறி பிரசாரத்தை தொடங்கினார்.
"தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை ஆகும்.பொறியியல், மருத்துவக் கல்வி ஆகியவற்றை தாய்மொழியில் பயில நடவடிக்கை எடுத்திருக்கிறோம்:
 
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர். நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசை மக்கள் விரும்புகின்றனர்.தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் மூலம், புதிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
 
நாட்டு மக்கள் வளர்ச்சியை அளிக்கும் அரசியலை விரும்புகின்றனர் என்பது கடந்த தேர்தலில் தெரிந்தது.கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது. 
 
திமுக தனது தொன்மையை இழந்துவிட்டது. ஊழல் செய்வதற்காக தனது மூளையை திமுக பயன்படுத்துகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு சுயலாபம் ஒன்றுதான் இலக்கு.திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது. சட்டை பையை நிரப்பி கொள்ளவே, திமுக - காங். ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா.
 
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி என்பது கருணை மிகுந்த ஆட்சியாகும். ஆனால், எதிர்க்கட்சிகள் கருணையற்ற ஆட்சியை நடத்தவே விரும்புகின்றனர் என  கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...