???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீரில் புதிய சொர்க்கம் படைப்போம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   20 , 2019  00:04:29 IST

மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்தமாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி, நாசிக்கில் நேற்று தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்க எடுத்த முடிவு, நாட்டின் ஒற்றுமைக்கான முடிவு. ஜம்மு, காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதாக இந்த முடிவு அமையும்” என பெருமிதத்துடன் கூறினார்.

“ஜம்மு, காஷ்மீரில் அமைதியற்ற நிலையையும், அவநம்பிக்கையையும், வன்முறையையும் பரப்புவதற்கு எல்லைப்பகுதி முழுவதும் நிறைய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் ஜம்முவிலும், காஷ்மீரிலும் உள்ள இளைஞர்களும், தாய்மார்களும், சகோதரிகளும் நீண்ட கால வன்முறையில் இருந்து வெளியே வர மனம் வைத்து விட்டார்கள். அவர்களுக்குத் தேவை முன்னேற்றமும், புதிய வேலைவாய்ப்புகளும்தான்” என்றும் மோடி குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், “ ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம் என்று வாக்குறுதி அளித்திருக்கிறோம். அந்த கனவுகளை நிறைவேற்றும் விதமாக நாடு நடை போடத்தொடங்கி விட்டது என்று நான் திருப்தியுடன் கூற முடியும். காஷ்மீரில் ஒரே அரசியல் சாசனம் என்ற நிலையை ஏற்படுத்தியது அரசின் முடிவு மட்டுமல்ல, நாட்டின் 130 கோடி இந்தியர்களின் உணர்வு களைப் பார்த்து எடுத்த முடிவும் ஆகும். காஷ்மீரில் புதிய சொர்க்கம் படைப்போம். காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரையும் தழுவுவோம்” என்றும் கூறினார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...