???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு: ராகுல் காந்தி அறிவிப்பு 0 நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் விவகாரம்: சி.பி.எஸ்.இ- உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு! 0 மாவட்டம்தோறும் ஐ.ஏ.எஸ்.அகாடமிகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு 0 மேட்டூர் அணையில் இருந்து ஜூலை 19-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் அறிவிப்பு 0 காவிரியில் வெள்ளப்பெருக்கு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது 0 சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: தமிழக முதலமைச்சர் அறிவிப்பு 0 பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் தற்காலிக பந்தல் சரிந்து விழுந்து விபத்து 0 கேரளாவில் தொடரும் கனமழை: எட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 0 எஸ்.பி.கே கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை 0 ரஜினி வேறு பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் 0 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி பேட்டி 0 இன்றைய ஆட்சியாளர்களிடம் எளிமையுமில்லை; தூய்மையுமில்லை: ப.சி. பேச்சு 0 கொல்லைப்புறம் வழியாக வந்தவர் டிடிவி தினகரன்: எடப்பாடி பழனிசாமி தாக்கு! 0 உலகக் கோப்பையை வென்றது ஃபிரான்ஸ்! 0 ஒகேனக்கல்லில் அருவிகளை மூழ்கடிக்கும் வெள்ளம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிகார் தேர்தல் முடிவுகளால் மோடிக்கு பின்னடைவு: ஊடகங்கள் கருத்து

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   09 , 2015  22:39:01 IST


Andhimazhai Image

"பிகார் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் பின்னடைவாகும்' என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

மிச்சிகன் பல்கலைக்கழக சந்தையியல் பேராசிரியராகப் பணிபுரியும் புனீத் மஞ்சாந்தா என்ற நிபுணர்,"அரசியல்வாதிகள் மீதான டெல்லி வாக்காளர்களின் வெறுப்புணர்வால் அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்ததைப்போல் அல்லாமல், கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் மோடி தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த மக்களின் எதிர்மறைக் கருத்துக்களை பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன" என்றவர்
இத் தேர்தல் முடிவு, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் வேகத்தைக் குறைக்கும் என்று தெரிவித்தார்.

"இந்தியாவின் ஆளுங்கட்சி முக்கிய மாநிலத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது' என்று தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

"மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை விரிவாக்க முயலும் பாஜகவின் முயற்சிக்கு இந்தத் தோல்வியால் தடங்கல் ஏற்பட்டுள்ளது' என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஊடகமான "தி டான்' என்ற பாகிஸ்தான் நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியில், "மாட்டுக்கறி சாப்பிடும் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துக்களைத் தூண்டி விடும் பாஜகவின் பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக பிகார் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்' என்று எழுதியிருக்கிறது. அந்தச் செய்திக்கு, "பிகாரில் தொலைந்த மோடியின் பட்டாசு' என்று தலைப்பிடப்பட்டிருந்தது. "பிகாரில் பாஜக தோற்றால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள்' என்று பாஜக தலைவர் அமித் ஷா, தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தார்.

"தி நியூஸ் இண்டர்நேஷனல்' என்ற நாளிதழில் தலையங்கத்தில், "பிகார் தேர்தல் முடிவுகள், கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் இருந்து வந்துள்ள முதல் நல்ல விஷயமாகும்' என்று எழுதியுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...