???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மோடியை சிவாஜியுடன் ஒப்பிட்டு நூல்: சிவசேனா எதிர்ப்பு

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   13 , 2020  20:14:55 IST

பாஜகவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் சமீபத்தில், 'ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்திற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. சிவசேனாவின் மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் ராவுத் இந்தப் புத்தகம் குறித்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘மகாராஷ்டிரா பா.ஜ.க இந்தப் புத்தகம் குறித்து அவர்களது நிலைப்பாட்டை விளக்க வேண்டும். சத்திரபதி சிவாஜியை இந்த உலகத்தில் யாருடனும் ஒப்பிட முடியாது. ஒரே ஒரு சூரியன், ஒரு சந்திரன். அதுபோல ஒரு பேரரசர் சிவாஜிதான், சத்திரபதி சிவாஜி. பிரதமரை திருப்திப்படுத்த சில விசுவாசமான அடிமைகள் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள்தான் அவருக்கு பிரச்சினையை உருவாக்குகிறார்கள்.

பா.ஜ.க அவர்களை அகற்ற வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தப் புத்தகத்தை உடனடியாக தடை செய்யவேண்டும். இந்தப் புத்தகம் டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் யாரிடமாவது இருந்தது தெரிந்தால் அவர்கள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...