???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

75 நாள் ஆட்சியின் சாதனைகள்: மோடி பெருமிதம்

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2019  23:06:58 IST

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று 75 நாள்கள் ஆகின்றன. இந்த 75 நாள்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்துக்கு பிரதமர் மோடி விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் தேசியக் கல்விக் கொள்கை, தேசிய மருத்துவ ஆணையம், ஊழல் பிரச்னைகள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர், ‘முதற்கட்ட சிறிது நாள்களிலேயே எங்களுடைய அரசு, இதுவரையில் இல்லாத அளவுக்கான வேகத்துடன் செயல்படுகிறோம். நாங்கள் என்ன செய்து முடித்தாலும், அதனுடைய முடிவு நல்ல எண்ணமும், தெளிவான திட்டமும் கொண்டதாக இருக்கும். எங்களுடைய அரசின் வெறும் இந்த 75 நாள்களில் ஏராளமான விஷயங்கள் நடைபெற்றுள்ளன. குழந்தைகள் பாதுகாப்பு முதல் சந்திரயான் ௨ வரை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் முதல் முத்தலாக் என்ற கொடுமையிலிருந்து இஸ்லாமியப் பெண்களுக்கு விடுதலை அளித்தது வரை, காஷ்மீர் முதல் விவசாயிகள் வரை, மக்களுடைய வலிமையான ஆணையுடன் இணைந்து வலிமையான அரசால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துள்ளோம்.

நம்முடைய காலத்தில் முக்கிய பிரச்னைகளாக உள்ளவற்றை நாங்கள் முதலில் கவனத்தில் எடுத்து கையாண்டுவருகிறோம். ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் தண்ணீர் வழங்கலை அதிகப்படுத்தவும், தண்ணீர் பாதுகாப்பை அதிகப்படுத்தவும் ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. , கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வலிமையான கட்டமைப்பின் காரணமாகவே, கடந்த 75 நாள்களில் எங்களால் இத்தனை விஷயங்களைச் சாதிக்க முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீரமைப்புகள்தான், தற்போது நாடு வேகமாக புறப்படுவதை உறுதிப்படுத்துகிறது.

17-வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரலாற்று சாதனை படைத்த ஒன்று. 1952-ம் ஆண்டிலிருந்து கணக்கில் கொள்ளும்போது, இந்தத் தொடர்தான் மிக அதிக மசோதாக்களை நிறைவேற்றிய ஒரு கூட்டத்தொடர். இது ஒன்றும் சாதாரண சாதனையல்ல. விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், மருத்துவத்துறையில் சீரமைப்பு உள்ளிட்ட முக்கியத்துவம் மிக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த விஷயத்தில் என்ன சாரம்சம் என்றால் எப்போது உங்களுடைய நோக்கம் சரியாக இருக்கிறதோ அங்கு, அதனுடைய காரணமும், செயல்படுத்தும் முறையும் தெளிவாக இருக்கும். அங்கே மக்கள் ஆதரவு இருக்கும். அப்போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு இலக்குகள் கிடையாது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...