![]() |
ம.நீ.ம தலைமையில் 3-ஆவது அணி - கமல்ஹாசன்Posted : திங்கட்கிழமை, பிப்ரவரி 22 , 2021 11:26:14 IST
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மையத்தின் தலைமையில் 3-ஆவது அணி அமையும் என அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யத்தின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், பிரதமா் மோடிக்கு 7 முறை கடிதம் எழுதியதாகவும் ஆனால், ஒரு முறை கூட அவரைச் சந்திக்க முடியவில்லை, தமிழனுக்கு மரியாதை கிடைப்பது இல்லை எனவும் கூறினார்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவர், மநீம தலைமையில் 3 - ஆவது அணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகத்தான் தோன்றுகிறது எனவும் அதற்கான மேகங்கள் கூடி வருவது தெரிகிறது, விரைவில் மழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.
|
|