அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கமல்ஹாசன் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் நீதி மய்யம் அழைப்பு!

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   06 , 2021  18:05:30 IST

நாளை ஒரு நாள் முழுவதும் நம்மவர் கமல்ஹாசனின் 67வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“நாளை (7.11.2021) காலை முதல் மாலை வரை நாள் முழுவதும், ‘நம்மவர்’ டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் 67-வது பிறந்தநாள் விழா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

காலை 10 மணியளவில் அலுவலகத்தில் பல்வேறு மருத்துவ நிபுணர்களைக்கொண்டு கண் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், உறுப்புதான முகாம் மற்றும் பல் மருத்துவ முகாம் ஆகியவை நம்மவரால் துவக்கி வைக்கப்படவுள்ளன. தொடர்ந்து கட்சித் தலைமை அலுவலகத்திலும், ராஜ்கமல் திரைப்பட நிறுவன அலுவலகத்திலும் மதிய உணவாக சுமார் 1,500 பேருக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.

மாலை 4 மணி முதல் தலைவர் அவர்கள், நம்மவர் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்கிறார். 5 மணியளவில் சென்னை ஆலந்தூர் தொகுதி மற்றும் நம்மவர் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியில் நமது தலைவர் தனது சொந்த செலவில் குடிநீர்த் திட்டங்களை காணொலி மூலம் துவக்கிவைக்கிறார். அத்துடன் e-library, கமல் கலைக்கூடம் மற்றும் மய்யம் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.

நாள் முழுவதும் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களைச் செயல்படுத்துவதே தனது பிறந்தநாளின் நோக்கம் என எண்ணிச் செயல்படும் நம்மவரை, நாம் அனைவரும் நாள்கூடி வாழ்த்துவோம்,கொண்டாடுவோம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...