???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16 0 ஐந்து லட்சமும் திமுக காரர்களுக்கேவா? 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கடும் எதிர்ப்பு

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  21:45:56 IST

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், இந்த திட்டத்துக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து குறிப்பாக அஸ்ஸாம், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலை வாய்ப்பு மற்றும் இதர காரணங்களுக்காக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குடிபெயர்ந்து தமிழக நகரங்களில் வசிக்கின்றனர். தமிழகத்தின் மக்கள் தொகையில் 4 கோடி மக்கள் நகரங்களில்தான் வசிக்கிறார்கள்.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நகரவாசிகளுக்கு 50% உச்சவரம்பு என்கிற ஆபத்து இருப்பதால், தமிழகத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் விவரங்கள் போன்றவை சரியாக இணைக்கப்படாமல், இந்த திட்டம் கவனக்குறைவாக அமல்படுத்தப்பட்டால் அது தமிழகத்தில் தற்போது இருக்கும் பொது விநியோக முறையை கடுமையாகப் பாதிக்கும்.

குடும்ப அட்டை பெறுவதில் நீக்கம் செய்வது போன்ற பொது விநியோக முறையில் மக்களுக்கு இருக்கின்றன தற்போதைய பிரச்னைகளை தீர்த்து, தமிழக குடும்ப அட்டைதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது.

பிற மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த ஏழை குடும்ங்களுக்கு அளிப்பதற்கான தானியங்கள், மற்றும் அதனைச் சேமித்து வைத்து விநியோகிப்பதற்கும் இத்திட்டத்தினால் ஏற்படும் கூடுதல் செலவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா என்று தெளிவான கொள்கை முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.

இத்திட்டத்தினை கடுமையாக எதிர்த்து இருக்கவேண்டிய தமிழக முதலமைச்சரும் உணவுத்துறை அமைச்சரும் இத்திட்டத்தை ஆதரிப்பதையும் மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது.

பல்வேறு உணவு பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கும் நமது நாட்டில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ என்கிற திட்டம் இந்திய அரசியல் சாசனத்தில் கூறியுள்ள கூட்டாச்சி அமைப்புக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு திட்டம். இந்த திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை மக்கள் நீதி மய்யம் கடுமையாக எதிர்க்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...