![]() |
நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!Posted : சனிக்கிழமை, ஜுலை 13 , 2019 00:03:47 IST
தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் மதுக் கடை அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எம்எல்ஏ தனியரசு கோரிக்கை வைத்துள்ளார். வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தில் பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, ”மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் வாங்குவது மிக கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கு நேரமாகிறது. எனவே நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும்” என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
|
|