???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   09 , 2019  22:49:47 IST

மற்ற மாநிலங்கள் வெங்காய விலை நெருக்கடியை சமாளித்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு வெங்காய விலை உயர்வு குறித்து கொஞ்சம்கூட கவலையில்லை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த நவம்பர் முதல் வாரம், ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது. நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து, கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டிசம்பர் 2-ந் தேதி ரூ.110 ஆக உயர்ந்தது. டிசம்பர் இரண்டாவது வாரம் ரூ.140 ஆக உயர்ந்தது. அதன் பிறகு நித்தமும் உயர்ந்து 200 ரூபாய் ஆகிவிட்டது. வெளிச்சந்தை விலைகளைச் சொல்லவே முடியாது. 230 ரூபாய் முதல் 250 வரை ஆகிவிட்டது.

இந்த விலை உயர்வு குறித்து தமிழக அரசு சிறிதேனும் கவலை கொண்டதா? அதனை குறைப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என வெளியில் தெரியவில்லை. இதெல்லாம் நம்முடைய வேலையா? என்ற அலட்சியத்தில் ஆட்சி நடத்துகிறார்களா? இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல; மற்ற மாநிலங்களுக்கும் இதே நெருக்கடி தான் என்று முதலமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், மற்ற மாநிலங்கள் இந்த நெருக்கடியைப் பெருமளவுக்கு சமாளித்துவிட்டன. தமிழகம் வழக்கம்போல, எல்லாவற்றையும் போல, போதிய அளவு வெங்காயம் வினியோகத்திற்கு செல்வதிலும், வெங்காய விலையை மக்களின் தாங்கும் சக்திக்கேற்ப கட்டுப்படுத்துவதிலும் மிகவும் பின்தங்கிவிட்டது.

இந்தியா முழுவதும் வெங்காயம் அதிக விலைக்கு விற்றாலும், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் விலை கட்டுக்குள் இருக்கிறது. வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட, அந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனை ஏன் தமிழக அரசால் செய்ய முடியவில்லை?

ஒரு அரசாங்கம் மனது வைத்தால், உரிய நடவடிக்கை எடுத்து தீர்க்க முடியாதா? ஒரேநேரத்தில் உள்ளாட்சி தேர்தலை மாநிலம் முழுக்க நடத்துவதற்குத்தான் திறனற்றுப் போனது என்றால், வெங்காய விலையையுமா கட்டுப்படுத்திடத் திராணியற்றுப் போய்விட்டது?. இது ஏதோ சாதாரண வெங்காயம்தானே என்று ஆட்சியாளர்கள் நினைக்கக்கூடாது. கடந்த காலத்தில் தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளையே, மாற்றக்கூடிய முக்கியமான அம்சமாக வெங்காயத்தின் விலைகள் இருந்துள்ளன. 1998-ல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது, டெல்லி யூனியன் பிரதேசத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்ததுதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் மெத்தனம் காரணமாக மக்களின் அடிவயிறு கலங்கிக்கிடக்கிறது.

வெங்காயம் மட்டுமல்ல, பூண்டு, முருங்கைக்காய், சமையல் எண்ணெய் ஆகியவையும் பற்றாக்குறை, விலை ஏற்றங்கள் குறித்த செய்திகள் வருகின்றன. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் இருப்பிலும், விலையிலும், வினியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் தனிமைப்படுத்தப்பட்டு போய் விடுவீர்கள் என்று எச்சரிக்கை செய்வது எனது கடமை ஆகும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...