???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா? பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2020  00:31:06 IST

வேளாண் மசோதாவை ஆதரித்ததற்காக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் மோடி கூறியிருப்பது விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் கடந்த 64 நாட்களாக தினம்தோறும் 5,000 மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 9,000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படியொரு சூழலில் தமிழகம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க அரசை பிரதமர் பாராட்டியிருப்பது வேடிக்கையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
 
கொரோனா பேரிடரில் தவியாய்த் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். வேளாண் மசோதாவை ஆதரித்ததற்காக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடி பாராட்டியிருப்பது விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...