???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெருமாள் முருகனுக்கு திமுக துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   18 , 2015  00:27:15 IST


Andhimazhai Image

எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு ஆதரவாக திமுக துணை நிற்கும் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: எழுத்தாளர் பெருமாள்முருகனை குறி வைத்து நடத்தப்படும் சகிப்புத் தன்மையற்றவர்களின் தாக்குதல்களும், போராட்டங்களும் அடிப்படைவாதிகளால் ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. இவர்களுடைய ஒரே நோக்கம் அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருந்து கொண்டிருக்கும் தமிழக மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்குவது மட்டுமே. நாகரிகத்தின் உணர்வுகளையும், இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் பண்புகளையும் மதிக்கும் சகிப்புத் தன்மை உடைய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள்.

மதம் பற்றியோ, சாதி பற்றியோ நடக்கும் ஆரோக்கியமான விவாதங்கள், மனம் திறந்த ஆய்வுகள் போன்றவற்றுக்கும் நாம் என்றுமே அஞ்சியது இல்லை. மற்றவர்களின் உணர்வுகளை எப்போதும் மதிக்கத் தெரிந்த நாம், அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள தனி நபரின் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் ஒற்றுமையுடனும் துணை நிற்கிறோம்.

கடவுள் மறுப்பு, ஹிந்து மதம், கிறித்தவ மதம், இஸ்லாம் போன்றவற்றின் பெயரில் நாம் வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. அப்படி வன்முறையில் ஈடுபடுவோருக்கு துணை போவதும் இல்லை. ஜனநாயக ரீதியான அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கருத்துகளையும், அதற்கு எதிர் கருத்துகளையும் நாம் ஆதரிக்கிறோம்.

4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட புத்தகத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடும் அதன் மக்களும், மதத்தின் பெயரால் நடக்கும் இந்த வன்முறைகளை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழக மக்களின் கருத்துச் சுதந்திரத்தைச் சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். மதச்சார்ப்பின்மையைப் போற்றும் ஜனநாயக பேரியக்கமான திமுக இது போன்ற மத அடிப்படைவாதத்துக்கு என்றும் எதிராக இருக்கும் என்றார் அவர்.
 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...