???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணையில் அலட்சியம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   26 , 2020  21:46:55 IST

மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, '10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் அக்டோபர் 1-ஆம் தேதி திறக்கப்படும்' என்று அரசாணை வெளியிட்ட பிறகு, 50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் முடிவு செய்வார்; பாடத்திட்டங்கள் பற்றி முதலமைச்சர் முடிவு செய்வார் என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். 'வழிகாட்டுதல் மட்டும் வழங்கப்படும்', 'பெற்றோர் சம்மதக் கடிதம் அவசியம்' என்றும் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் தலையில் போடுகிறது அதிமுக அரசு.
 
பள்ளிகளைத் திறக்கிறோம் என்று அறிவித்து விட்டு எதற்கு இவ்வளவு குழப்பங்கள்? பல்வேறு துறைகளுக்கு இடையில் முன்கூட்டியே கலந்தாலோசனையும் இன்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. இப்படி அவசர கதியில் மாணவர்களைப் பள்ளிக்கு வரச் சொல்வதன் புதிர் என்ன? மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது; அதிமுக அரசு இன்னொரு புறம் விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.” இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...