???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted : சனிக்கிழமை,   மார்ச்   23 , 2019  00:58:59 IST

சென்னை - சேலம் இடையிலான 8 வழி விரைவு சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சேலத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குகளை சேகரித்தார். பின்னர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது-
 
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அதிமுக கூறுகிறது. ஆனால் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்கு இப்போதே பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டதாக எனக்கு செய்தி வந்துள்ளது. இளைஞர்களை ஏமாற்றுவதற்காக அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
மத்திய, மாநில ஆட்சியின் மீது மக்கள் வெறுப்பும், கோபமும் கொண்டுள்ளனர். 40 தொகுதிகளிலும் மக்களின் எழுச்சியை பார்க்க முடிகிறது. இதனால் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். 
 
உதய சூரியன் உதித்ததற்கு பின்னர்தான் இந்த  தமிழ் சமூகம் வெளிச்சத்தை பார்த்திருக்கிறது. சென்னை - சேலம் இடையே 8 வழி விரைவு சாலை திட்டத்தை விவசாயிகளும், மக்களும் எதிர்த்து வருகின்றனர். இதனை ரத்து செய்வோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...