???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted : வியாழக்கிழமை,   ஜுன்   04 , 2020  22:33:57 IST

கொரோனா தொற்றால் சென்னை மிகப்பெரிய பாதிப்பு அடைந்துள்ளது. ராயபுரம் உள்பட 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச்சிந்தனையை பயன்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா நோய்த்தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மிக, மிக அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

‘கொரோனாவை மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்திவிட்டோம் என்றும், பலியானவர் எண்ணிக்கை குறைவு என்றும் தனக்குத் தானே மார்தட்டிக்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் 5 மண்டலங்கள் முழுமையாக கொரோனா மண்டலங்களாக மாறிவிட்டதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? அதுவும் சென்னையில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரம், ஆயிரமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே போனால் மருத்துவ நிபுணர்கள் சொல்வதைப்போல, லட்சத்தை தாண்டி செல்லுமோ? என்றே நினைக்கத்தோன்றுகிறது.

உரிய சோதனைகள் உடனடியாக செய்யப்படுவது இல்லை. சோதனை முடிவுகள் உடனே சொல்லப்படுவதில்லை. மரணங்கள் அனைத்தும் 5 நாட்கள் கழித்துத்தான் அறிவிக்கப்படுகின்றன. கொரோனா மரணங்களாக இல்லாமல் வேறு நோய்கள் சொல்லப்படுகின்றன. இப்படி பல்வேறு சந்தேகங்களை மக்கள் எழுப்பி வருகிறார்கள். இவை எதற்கும் முதலமைச்சரோ, அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ உரிய பதிலை சொல்வது இல்லை. தினமும் பாசிட்டிவ் ஆனோர் எண்ணிக்கையை மட்டும் கொடுத்துவிட்டு கடமை முடிந்ததாக சென்று விடுகிறார்கள்.

ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை ஆகிய 5 மண்டலங்களையும் கடுமையான அரண் அமைத்து காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி, ‘கொரோனா இல்லாத சென்னை’யாக காட்டுவதற்கு அரசு முயற்சிப்பதாக தெரிகிறது. நோய் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை வீடு, வீடாக செய்யவேண்டும். இந்த பகுதியை சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தவேண்டும்.

கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு தேவையான பொருட்களை அரசே வழங்கவேண்டும். அந்த பகுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்கவேண்டும். சென்னையின் 5 மண்டலங்களை காப்பதில் அரசு முழுச்சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...