???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   31 , 2020  23:22:59 IST

தி.மு.க. அறக்கட்டளை தலைவரும், மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் தேவையான வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென மத்திய, மாநில அரசுகளுக்கு தி.மு.க. தன்னால் இயன்ற ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும், உதவிகளையும், அறம் சார்ந்த முக்கிய கடமையாக எண்ணி பணி செய்து வருவதை அனைவரும் அறிவர்.

அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் இருக்கும் “கலைஞர் அரங்கத்தை”, கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர், தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு, அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அரசு சார்பில் “கலைஞர் அரங்கத்தை” பயன்படுத்தி, உரிய ஏற்பாடுகளை செய்யவரும் அதிகாரிகளுக்கு, தி.மு.க.வின் சார்பில் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் எழுதிய இந்த கடிதத்தை சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களுமான மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று காலை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாசை நேரில் சந்தித்து அளித்தனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...