???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

"தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி": மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2018  08:17:40 IST

திமுக தலைவர் கருணாநிதியை இழந்து வாடும், கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
 
தலைவர் கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்த வேதனையில், ஒட்டுமொத்த தேசமே கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, அவரின் பேராற்றலும் பெரும்சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்தளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது என்றார்.
 
அவருக்கு, இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர் உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
 
மேலும் கருணாநிதியை காப்பாற்றுவதற்காக போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள், இரவு, பகலாக மருத்துவமனை வாசலிலேயே தவமாய் காத்திருந்த பொதுமக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், அவரின் உடல்நிலை குறித்த  செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை, ஊடகத்துறையினர் என அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
 
கருணாநிதியின் விருப்பத்தை நிறைவேற்றிட, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அண்ணா-வுடன் இணையும் "இறுதிப் பரிசை" வழங்கிய நீதியரசர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்களுக்கு எதிராக தொடுத்த வழக்குகளை திரும்பப் பெற்றவர்களுக்கும், நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமான வாதங்களை முன் வைத்து நீதி கிடைக்க செய்த மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குவதாக கூறியுள்ளார்.
 
மேலும் கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும், மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அவர்களை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...