???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   01 , 2020  22:39:19 IST

கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘3 நாளில் கொரோனா ஒழிந்துவிடும்‘ என்று ஏப்ரல் 16-ந்தேதி உத்திரவாதம் கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் 5-வது முறையாக ஜூன் 30-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறோம், தேவையான நிவாரணங்களை செய்து வருகிறோம், குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகம், நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக்குறைவு என்று தனது கொரோனா தோல்வியை திசை திருப்பிடும் நோக்கில் கதை கதையாக அளந்திருக்கிறார்.

நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றால் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி? தினமும் 500 முதல் ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதும், நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) மட்டும் 1,149 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதும் இந்த தமிழ்நாட்டில்தானே? தினமும் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை இருப்பதும் இந்த மாநிலத்தில்தானே? மக்களை பாதுகாக்கிறோம் என்று முதலமைச்சர் சொல்வது உண்மைக்கு மாறானது அல்லவா? அவருக்கே அது வேடிக்கையாகவும், வினோதமாகவும் இல்லையா?

ஆகவே இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தை தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் விளம்பரத்திற்காக வீணடிக்காமல், ஜூன் மாதத்தையாவது உண்மையான மக்கள் விசுவாசத்துடன் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்யவேண்டும். அதை விடுத்து அ.தி.மு.க.வுக்குள் குழு அரசியல் நடத்த ஒவ்வொரு அமைச்சராக இறக்கிவிட்டு எதிர்க்கட்சிகளை ஏசவும், பேசவும் செய்வதால் எவ்வித பயனும் ஏற்படாது என்று எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...