???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிக்கிம் மாநிலத்தின் தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்! 0 மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் விலகல்! 0 காஷ்மீர் சட்டசபைக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் : உமர் அப்துல்லா வலியுறுத்தல் 0 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதலமைச்சர் அறிவிப்பு! 0 பெண் பத்திரிகையாளர்கள் அவதூறு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் 0 மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  08:06:55 IST

தமிழகத்தில் இப்போது அறிவிக்கப்படாத பாரதிய ஜனதா ஆட்சிதான் நடைபெறுகிறது என நீட் தேர்வுக்கு எதிராகத் தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

நீட் தேர்வுக்கு எதிராக தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

 

நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத மாணவி மரணம் தற்கொலையாக இருந்தாலும் அதை கொலையாகத்தான் கருதவேண்டும். அனிதா மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. திருச்சியில் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம் நடத்தினோம். இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதன் அடுத்த கட்டமாக மீண்டும் எந்த வகையில் போராட்டம் நடத்துவது என 2 நாளில் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரைவில் அறிவிப்போம். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி நாம் போராடினாலும் மத்திய மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை. இந்தப் போராட்டம் மட்டுமல்ல விவசாயிகள் போராட்டங்கள் நடைபெறுகிறது. ஆனால் எதற்கும் செவி சாய்க்காமல் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. தி.மு.க. நடத்தும் போராட்டம் மாணவரின் நலனுக்காக நடத்தப்படுகிறது.

 

நீட் தேர்வுமுறை மத்தியில் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்த போதுதான் கொண்டு வரப்பட்டது என்கிறார்கள். இதற்கு நான் பலமுறை பதில் சொல்லி விட்டேன். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு கலைஞர் உடனே கடிதம் எழுதி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் இப்போது பா.ஜனதா ஆட்சி தான் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஆட்சியை அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள். மக்கள் பிரச்சனையை அவர்கள் தீர்க்கவில்லை. இதனால் மக்கள் கொதித்துப்போயுள்ளனர். மக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தை நடத்துகிறார்கள். அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்.

 

இவ்வாறு மு.க.ஸ்டாலின்  பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...