???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   02 , 2020  23:14:41 IST

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளில் ஆடம்பர நிகழ்ச்சிகள் வேண்டாம் என கட்சியினருக்கு முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், திமுக தலைவர் முகஸ்டாலின்  மரியாதை செலுத்தினார். அவருடன் பிற திமுக முன்னணித் தலைவர்களும் கலந்துகொண்டனர். இணையதளத்தில் திமுகவினர் கலைஞருக்குப் புகழ் அஞ்சலி செலுத்திவருகின்றனர். ட்விட்டரில் #FatherofmodernTamilnadu என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி உள்ளது.

கலைஞர் என்பது ஒரு தனி மனிதரின் பெயரல்ல, பன்முகம் கொண்ட ஒரு தத்துவத்தின் பெயர்!- என திமுக தலைவர் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 ‘’அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு’’ என கனிமொழி எம்பி ட்விட்டரில் நெகிழ்ந்துள்ளார்.

குவளையில் மலர்ந்து குவலயம் விரிந்தாய்! எழுதுகோல் எடுத்தே செங்கோல் பிடித்தாய்! நெருப்பைச் சுவைத்தே நெஞ்சுரம் வளர்த்தாய்! நெருங்கும்பகையை நெடுகிலும்சாய்த்தாய்! பக்குவம்தான்உனது படைக்கலன்! சமத்துவம்தான்உனது அடைக்கலம்!- என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்- என ம.நி.ம தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...