???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   20 , 2019  21:30:15 IST

சென்னை சோழிங்கநல்லூரில் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி விழா மேடையில் பேசினார்.
 
அப்போது, இன்று அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் அறையில் ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளது. அதில் துணை முதல்வர் கலந்து கொண்டிருக்கிறார்.
 
தலைமைச் செயலகம் அனைத்து மதத்தினருக்குமான பொதுவான ஒரு இடம் அங்கு யாகம் வளர்க்க அதிகாரம் கொடுத்தது யார் என கேள்வி எழுப்பினார்.
 
பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவி பறிபோன போது ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார். ஆவிகளோடு தியானம் செய்ததால் என்னமோ அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்து.
 
அதே போல் தற்போது கொடநாடு விவகாரத்தில் முதல்வர் கொலைக் குற்றவாளியாக சிறைக்கு செல்லவிருக்கிறார். அதனால்தான் மீண்டும் முதல்வர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என பன்னீர் செல்வம் யாகம் வளர்த்திருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...