???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   22 , 2019  23:49:46 IST

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார். விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர்,

'தலைவர் வாழ்வே போராட்ட களம்தானே. அவர் மாணவர் பருவத்தில் இருந்தபோது திருவாரூரில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்க சென்றார். ஆனால், அவரை சுயமரியாதைக்காரன், சீர்திருத்தவாதி என்று கூறி சேர்க்கை மறுக்கப்பட்டது. ஆனால், மனம் தளராத அவர் அருகில் உள்ள கமலாலயம் குளத்தில் சென்று நின்று கொண்டு படிக்க இடம் தரவில்லை என்றால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல் போராட்டத்தை தொடங்கினார். அவரது உறுதியையும் போராட்ட குணத்தையும் பார்த்து அவருக்கு படிக்க இடம் கொடுத்தார்கள்.

எனது தாயார் தயாளு அம்மாளை திருமணம் செய்து கொண்ட நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. திருமணத்துக்கு முன்னர் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று மாலையும் கழுத்துமாக சென்று போராட்டத்தில் பங்கேற்று வந்த பிறகே திருமணம் செய்து கொண்டார். மொழிப்போராட்டத்தின் போது டால்மியா புரம் பெயரை மாற்ற ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து, ரெயிலை மறித்து போராட்டம் நடத்தி, கல்லக்குடி என்ற பெயர் மாற்றம் செய்தார்.

இதுமட்டுமா? வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அவர் மறைந்தபோது 6 அடி இடத்துக்காக போராடிதானே மெரினா கடற்கரையில் ஓய்வு எடுக்கிறார். தமிழக மக்களுக்காக ஓய்வில்லாமல் போராடிய தலைவருக்கு, 5 முறை முதலமைச்சராக இருந்தவருக்கு 6 அடி நிலம் கொடுக்க தற்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்கள் மறுத்தார்கள். தமிழை செம்மொழி பட்டியலில் அறிவித்தவருக்கு அ.தி.மு.க. அரசு இடம் இல்லை என்றது.

தற்போது மேலவை எம்.பி.யாக இருக்கும் வக்கீல் வில்சன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, வழக்கில் வெற்றி பெற்றுதான், நாம் இடம் பெற்றோம். ஆக, வாழ்ந்த காலத்திலும், வாழ்வுக்கு பின்னரும் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் அவர்" இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...