???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மெரினாவில் அசாம் இளைஞர்கள் போராட்டம்! 0 ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ் 0 உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு 0 மாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம் 0 டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் 0 FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம்! 0 அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை 0 உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில்! 0 சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு 0 திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு 0 அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! 0 சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் 0 ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் 0 உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் 0 ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   14 , 2019  21:59:22 IST

தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி அனுப்பியதாக மாணவியின் தாயார் தெரிவித்திருப்பது தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்த்தப்பட்டதைக் காட்டுகிறது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டியில் பயின்ற மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘சென்னையில் உள்ள ஐ.ஐ.டியில் பயின்ற மாணவி ஃபாத்திமா லத்தீப், தனக்குத் தரப்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அவர், தனது தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள குறிப்பில் தனது மரணத்துக்கு காரணமாக பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் மதவெறிச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலையில், தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சென்னை ஐ.ஐ.டியில் சேர்த்ததாகவும் அப்படி இருந்தும் தன் மகளைச் சிறுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்பலிக்கு ஆளாக்கிவிட்டதாக சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் தாயார் தெரிவித்திருப்பது நமது தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்க்கப்பட்டதைக் காட்டுகிறது. இது வேதனைக்குரியதும் வெட்கித் தலைகுனிய வேண்டியதுமான நிகழ்வுமாகும்.

தமிழ்நாட்டு மாணவர்கள், பிற மாநிலங்களின் கல்வி நிலையங்களில் தற்கொலைக்கும் மர்ம மரணங்களுக்கும் உள்ளாகும்போது நமக்கு ஏற்படும் பதைப்பும் துடிப்பும், இந்த மாணவியின் சோகமயமான உயிரிழப்பிலும் ஏற்படுகிறது. மாணவியின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேரளா முதல்வர் கோரியிருக்கிறார். மாநிலத்தை ஆள்பவர்கள், இதனைக் கவனத்தில் கொண்டு நியாயமான, நேர்மையான, வெளிப்படைத்தன்மை கொண்ட சுதந்திரமான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். விசாரணை காலவரையறையும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னை ஐ.ஐ.டியில் இருந்து இத்தகைய சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. தமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி இருந்தாலும் அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற தமிழ் மறையாம் திருக்குறள் காட்டும் சமூகநீதிக்கு எதிரான சாதி மத பேதம் கொண்ட சனாதனப் போக்கு, கல்விப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிலரின் மனதில் குடிகொண்டிருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களை நடத்துவதும் இத்தகைய விபரீத விளைவுகளுக்கு காரணமாகிவிடுகின்றது. கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து நம் இந்திய தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல சமமான உரிமையுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மேம்பட ஆவண செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...