???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   20 , 2019  00:25:32 IST

விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அசோகபுரி, ஈச்சங்குப்பம் கிராமங்களில் திண்ணை பிரசாரம் செய்தார். அப்போது அவர், 'ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களை பற்றி சிந்திக்கிற கட்சி தி.மு.க. மட்டும்தான். நியாயமாக ஆட்சியில், பதவியில் உள்ளவர்கள் தான் மக்களை தேடி வர வேண்டும். ஆனால் அவர்கள் வருவதும் கிடையாது, மக்களுக்காக எதையும் செய்வதும் கிடையாது. ஜெயலலிதா செய்த புண்ணியத்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டனர்.

ஒரு மெஜாரிட்டி ஆட்சிக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இப்போது கூடுதலாக 5 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி சுப்ரீம் கோர்ட்டில் ஊசலாடுகிறது. இன்னும் 1½ மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிடலாம். தீர்ப்பு வந்தவுடன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கவிழும்.

அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் விலகுகிறாரோ இல்லையோ அடுத்த தேர்தலில் அவர்களை மக்கள் புறக்கணித்து தோற்கடிக்க போகிறார்கள். அவர்களின் ஒரே எண்ணம் எப்படியாவது ஆட்சியில் இருக்க வேண்டுமே தவிர மக்களை பற்றியோ, நாட்டை பற்றியோ கவலைப்படுவதில்லை.

எனவே ஊழல் நிறைந்த, கொள்ளை ஆட்சிக்கு முடிவுக்கட்ட நல்ல முன்னோட்டம்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலோடு அ.தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...