???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மீன்பிடிச் சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   11 , 2017  07:49:18 IST


Andhimazhai Image

தமிழக மீனவர்களை பாதிக்கும் இலங்கை அரசின் சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

 

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இலங்கை அரசு கடுமையான தண்டனைப் பிரிவுகள் கொண்ட ஒரு சட்டத்தை அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் உட்பட 53 மீனவர்கள் இதுவரை இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கையின் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். 146-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, இலங்கையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.

 

இப்படி பல்வேறு இன்னல்களை கொடுத்து வரும் இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை அறவே ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் இப்போது கொண்டு வந்துள்ள கருப்புச் சட்டம் தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவின் மீன் ஏற்றுமதிக் கொள்கைகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

 

இலங்கையின் நட்பு நாடு இந்தியா என்றபோதும்,   இந்திய தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் 50 ஆயிரம் அபராதம், இருவருடம் சிறை தண்டனை, படகுகள் பறிமுதல் என்று மிகக் கடுமையான கொடுங்கோல் தண்டனைகளைக் கொண்டு வந்திருப்பது நட்பு நாட்டிற்கு இலக்கணம்தானா? என்பதை இலங்கை அரசு ஆழ்ந்து யோசிக்கும் அளவிற்கான ஒரு அழுத்தத்தை தூதரக ரீதியாகவோ, பிரதமர் மட்டத்திலோ மத்திய அரசு அந்நாட்டு அரசுக்குக் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. அந்த அழுத்தம் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

 

ஆகவே, இலங்கை அரசின் கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும் அதேநேரத்தில், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...