???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக்கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தி ஜப்பான் வரலாற்று சாதனை 0 உலகக்கோப்பை கால்பந்து: போலந்தை வென்றது செனகல் அணி! 0 உலகக்கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது ரஷ்யா! 0 சீன பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை 0 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழில் நடிக்கிறார் கங்கனா ரணாவத்! 0 ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்: ஆட்சியர் தகவல் 0 காஷ்மீரில் அமலுக்கு வந்தது ஆளுநர் ஆட்சி! 0 தீர்ப்பை அவதூறாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?: நீதிபதி கிருபாகரன் 0 வளர்ச்சியை எதிர்ப்போர் கண்டிப்பாக கைது செய்யப்பட வேண்டும்: தமிழிசை 0 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு 0 எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மாணவி வளர்மதி கைது 0 நிர்மலா தேவி விவகாரம்: கருப்பசாமியின் ஜாமீன் மனு வாபஸ் 0 தினகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் 0 காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை: குலாம் நபி ஆஸாத் 0 காஷ்மீரில் ஆட்சியைவிட தேசிய பாதுகாப்பு முக்கியம்: கூட்டணி விலகல் குறித்து பாஜக விளக்கம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே ஒரே தீர்வு : மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   07 , 2017  06:05:42 IST

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

நீட் தேர்வை ஏற்க மறுத்து, உலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாணவர் சேர்க்கையை நிறுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக்கனவை நிறைவேற்றி வந்த இந்தக் கல்லூரி, இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு மத்திய அரசு திணித்த நீட் தேர்வு காரணம் ஆகிவிட்டது மிகவும் கவலை அளிக்கிறது. நீட் தேர்வின் பாதிப்புகளை உச்சநீதிமன்றம் முன்பு எடுத்துவைத்து, நீட் தேர்வு செல்லாது என்று 2013-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில், இக்கல்லூரிதான் முக்கியக்காரணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மருத்துவக் கல்வி பெறும் கனவில் மாணவர்களும், தங்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகம் 160 இடங்களை இழப்பது என்பது தாங்க முடியாத கொடுமை. ஆகவே, நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும். உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, நீட் தேர்வை ரத்து செய்து, அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் சி.எம்.சி. கல்லூரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்கவும் வழிவிட்டு, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்றவும், மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

இவ்வாறு தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...