???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

#MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   15 , 2018  22:52:19 IST

சினிமா மட்டுமல்லாது பத்திரிகை, வணிகம், தொழில்நுட்ப துறை என அனைத்து துறைகளிலும் உள்ள பெண்கள் பாலியல் புகார்களை #Metoo மூலமாக தெரிவித்து வருகின்றனர். மத்திய வெளியுறவு துறையின் இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். எம்.ஜே.அக்பர் பல பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக முன்னர் இருந்த போது பாலியல் ரீதியான தொந்தரவு அளித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த அவர் டெல்லி திரும்பியதும் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியதாக தகவல்கள் பரவின. ஆனால், அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என மத்திய அரசு உறுதி செய்தது. பாலியல் புகார் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எம்.ஜே.அக்பர் “எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை” என குறிப்பிட்டிருந்தார்.
 
இதனை தொடர்ந்து, 14 பெண்கள் புகார் கூறியிருந்த நிலையில், பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது maddum டெல்லி பாட்டியாலா  நீதிமன்றத்தில் எம்.ஜே.அக்பரின் வழக்கறிஞர்கள் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இதேபோல, பாலிவுட் நடிகர் அலோக் நாத், தன் மீது #MeToo புகார் கூறிய கதையாசிரியர் வினிதா நந்தா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...