???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான் 0 இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637ஐ தாண்டியது! 0 சென்னை பீனிக்ஸ் மால் சென்றவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல் 0 10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு இன்று அமல் 0 மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் 0 கூட்டுறவு கடன், குடிநீர் கட்டணம், சொத்து வரி கட்ட 3 மாதம் அவகாசம் 0 கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு 0 கலைஞர் அரங்கத்தை கொரோனா தனிமைப்படுத்தும் வார்டாக பயன்படுத்தலாம்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 நாளை முதல் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 விநியோகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஷாலுக்கு மிஷ்கின் பதிலடி!

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   12 , 2020  22:16:33 IST

துப்பறிவாளன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தின் 2ம் பாகத்தில் மீண்டும் விஷால் - மிஸ்கின் கைகோர்த்தனர். லண்டனில் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் விஷால் மிஸ்கின் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

துப்பறிவாளன்2 படப்பிடிப்பிலிருந்து பாதியில் மிஸ்கின் வெளியேறினர். இந்நிலையில் விஷால் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மிஸ்கின் மீது பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டது. கதை எழுத மட்டும் மிஸ்கின் லண்டனில் 35 லட்சம் செலவிட்டதாகவும் 13 கோடி வரை படப்பிடிப்புக்காக செலவழிக்கப்பட்ட நிலையில் திரைப்படத்திலிருந்து மிஸ்கின் பாதியில் விலகி உள்ளதாகவும் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாக வேறு எந்த தயாரிப்பாளரும் மிஸ்கினை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் விஷால் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்மையில் நடைபெற்ற வெப்சீரிஸ் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் மிஸ்கின் பேசி உள்ளார். கதை எழுதுவதற்காக லண்டனில் 7 லட்ச ரூபாய் மட்டுமே செலவிட்டதாகவும் 35 லட்சம் ரூபாய் செலவுக்கான  ஆதாரத்தை வெளியிட முடியுமா எனவும் விஷாலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஊதியம் குறித்த வாக்குவாதத்தின் போது தனது தாயாரை விஷால் இழிவாக பேசியதாகவும் இதனை தட்டிக்கேட்ட தனது தம்பியை விஷால் தாக்கியதாகவும் மிஸ்கின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய மிஸ்கின் விஷால் கேட்டுக்கொண்டதற்காக இந்த திரைப்படத்திற்கான தடையில்லா சான்றிதழை வழங்கினேன்.

இதுநாள் வரை தமிழகத்தில் விஷாலை தான் பாதுகாத்து வந்ததாகவும் இனி விஷாலிடம் இருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...