???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மிஸ் இந்தியாவாக தேர்வானார் சென்னை கல்லூரி மாணவி!

Posted : புதன்கிழமை,   ஜுன்   20 , 2018  23:58:59 IST

இந்திய அழகியாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு செய்யப்பட்டார். ‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க முடியும்.
 
இந்த ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டி மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் (வயது 19) என்ற கல்லூரி மாணவி உள்பட நாடு முழுவதிலும் இருந்து 30 இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு சுற்றுகளை கடந்து நேற்று முன்தினம் இறுதிப்போட்டி நடந்தது.
 
இதில் சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் வெற்றி பெற்று மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உலக அழகியும், முன்னாள் இந்திய அழகியுமான மனுஷி சில்லார் மகுடம் சூட்டினார்.
 
அரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி (21), ஆந்திராவை சேர்ந்த ஸ்ரேயா ராவ் (23) ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பெற்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...