அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன்தான் காரை ஓட்டிவந்தார்: காயமடைந்த விவசாயி வாக்குமூலம்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   06 , 2021  10:00:03 IST

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து, அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பதற்றத்தை குறைக்க லக்கிம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகள் குகுடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்குவதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது.
 
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த விவசாயி தேஜிந்தர் விர்க் கூறுகையில், 72 மணி நேரங்கள் கடந்த பிறகும், ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. மத்திய அமைச்சரின் வருகைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், எங்களைக் கொல்ல சதி நடந்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளை அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தே, அவரது வருகையின் போது போராட்டத்தில் ஈடுபட்டோம்.
 
தொடர்ந்து, அமைச்சர் வரும் பாதை மாறிவிட்டது என்று எங்களுக்கு மாலை 3 மணியளவில் கூறப்பட்டது. இதையடுத்து, நாங்கள் அமைதியாக திரும்பிச் செல்ல ஆரம்பித்தோம். அப்போது, 100 கிமீ வேகத்தில் திடீரென எங்கள் பின்னால் வேகமாக வந்த கார்கள் எங்கள் மீது வேண்டுமென்றே மோடியது. அந்த காரில் அஜய் மிஸ்ராவின் மகன் மற்றும் அவரது ஆட்கள் இருந்தனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த நான் சுயநினைவை இழந்தேன்.
 
மேலும், கார் மோதியதால் சிதறிய கூட்டம், பின்னர் அவர்கள் பாதுகாப்புக்கு வந்த கார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, போராட்டக்கார்கள் சிலரை காப்பாற்றி போலீசில் ஒப்படைத்தனர் என்றார்.
 
தொடர்ந்து, மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், காரை ஓட்டியது அமைச்சரின் மகன் என்பதற்கு நான் சாட்சியமளிக்க தயாராக இருக்கிறேன் என்றார். மேலும், யோகி ஆதித்யநாத் அரசு தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...