அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஆபாச வீடியோ விவகாரம்: பாஜக அமைச்சர் ராஜினாமா

Posted : புதன்கிழமை,   மார்ச்   03 , 2021  15:49:32 IST


Andhimazhai Image

ஆபாச வீடியோ விவகாரத்தில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

 

பாஜக சேர்ந்த அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளியிடம் வட கர்நாடகாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், அணைகள் குறித்து ஆவணப் படம் எடுக்க உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ பதிவு உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், அந்த வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த வீடியோ பதிவில், ரமேஷ் ஜார்கிகோளி அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகளும், அந்தப் பெண்ணுடன் அவர் உருண்டு புரள்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமில்லாது. அந்தப் பெண்ணுடன் அவர் செல்போனில் உரையாடிய ஆடியோ பதிவு மற்றும் வாட்ஸ் பதிவுகளும் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து  சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் மூலமாகவும் இது மேலும் உறுதியாகியுள்ளது.

 

இதற்கிடையே, ரமேஷ் ஜார்கிகோளி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை. இது நூறு சதவீதம் பொய்யான குற்றச்சாட்டு. என் மீதான விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும். இந்த குற்றச்சாட்டிலிருந்து நான் வெளிவருவேன். தார்மீக அடிப்படையில் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...