???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   13 , 2019  22:41:13 IST

சென்னை தரமணியில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ் அறிஞர்கள் பலருக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விருது வழங்கினார். மேலும் தமிழ் சார்ந்த கவிதை நூல்களை வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கீழடி அகழ்வாராய்ச்சி முடிவில் 5500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஓராண்டு பொதுமக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் நிதி உதவியுடனும், தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியும் இந்த அருங்காட்சியகம் எந்த தடையும் இல்லாமல் கட்டப்படும். இம்மாத இறுதியில் மத்திய தொல்லியல் அமைப்பு பார்வை செய்ய வருகிறது. மேலும் நான்கு கிராமங்களில் ஆராய்ச்சி நடத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

6-வது கட்ட அகழ்வாராய்ச்சி ஜனவரியில் தொடங்கப்படும். உலக தரத்திலான அருங்காட்சியக கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும். மோடி இதற்கும் பாராட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையம் வரும் சிங்கப்பூர், இலங்கை, கத்தார் நாட்டு விமான சேவைகளில் தமிழ் மொழி பயன்பாட்டிற்கு வந்துள்ளது’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...