???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு 0 கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் 0 கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடுக!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 0 தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? -முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 0 எட்டு போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: உ.பி, ரவுடி விகாஸ் துபே கைது! 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   14 , 2020  21:20:15 IST

நியூயார்க் நகரில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு மத்தியில், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியருமான சத்ய நாதெள்ளா (வயது 52), பத்திரிகை ஆசிரியர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய கருத்தை தெரிவிக்குமாறு கேட்டனர். "இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது வருத்தம் அளிக்கிறது. நான் வெளிப்படையாக இந்தியாவில்தான் வளர்ந்தேன். அங்கிருந்துதான் நான் என் பாரம்பரியத்தை, கலாசாரத்தை பெற்றேன். நான் வளர்ந்த நகரம், வளர்வதற்கு ஒரு சிறந்த நகரம் என்று எப்போதும் நான் உணர்கிறேன். நாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி இருக்கிறோம்.

ஆனால் இப்போது இந்தியாவில் நடப்பது வருத்தம் அளிக்கிறது.

உண்மையிலேயே அங்கு நடந்து கொண்டிருப்பது பற்றி வெளிப்படையான தகவல்கள் அளிக்கப்படுகின்றன. 2 அற்புதமான அமெரிக்க விஷயங்களால் நான் உருவானேன். ஒன்று தொழில்நுட்பம். மற்றொன்று, வளர்ந்து வரும் இடத்தையும், அதன் குடியேற்ற கொள்கையையும், இது போன்ற ஒரு நாட்டில் என்னுடையது என்பது போன்ற ஒரு உணர்வும் என்னை வந்தடைகிறது. ஆனால் இந்தியாவில் நடப்பது மோசமானது.

இந்தியாவில் குடியேறுகிற வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர், இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்குபவராகவோ அல்லது இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவோ வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் எனது இந்திய பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளேன். பன்முக கலாசாரம் கொண்ட இந்தியாவில் வளர்ந்தேன்.

இந்தியா மீதான எனது நம்பிக்கை என்னவென்றால், அங்கு குடியேறிச்செல்கிற ஒருவர் வளமான ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்க வேண்டும் அல்லது பன்னாட்டு நிறுவனத்துக்கு தலைமை தாங்க வேண்டும். அது இந்திய சமூகத்துக்கு, பொருளாதாரத்துக்கு பெருமளவில் பலன் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...