???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   19 , 2020  19:54:38 IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த எம்ஜிஆர் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு அதிமுக உள்ளிட்ட பொதுமக்கள் நினைவு நாள், பிறந்தநாள் மற்றும் அதிமுக கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி எம்ஜிஆர் பிறந்ததினம் கொண்டாடப்பட்டது. இதற்கு முன் தினம் எம்ஜிஆர் சிலையை அதிமுக நகர செயலாளர் ஓசி முருகன் தலைமையில் தூய்மைப்படுத்தி காவி நிறத்தில் சட்டை அணிவிக்கப்பட்டு பின்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கடந்த இரண்டு மாத காலமாக இந்த கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை காவி நிறத்தில் காணப்பட்டது. வழக்கமாக எம்ஜிஆர் சிலைக்கு வெள்ளை நிறத்தில் மட்டுமே சட்டை அணிவிக்கப்பட்டு இருக்கும். ஆனால் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் கருங்காலிகுப்பம் கிராமத்தில் உள்ள இந்த சிலைக்கு மட்டும் காவி நிறம் பூசப்பட்டுள்ளது படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இதுகுறித்து நகரச் செயலாளர் ஓசி முருகனிடம் விசாரித்தபோது, ‘நாங்கள் ஆரஞ்சு நிறத்தில்தான் சிலையில் சட்டையின் நிறத்தை மாற்றினோம். இது எங்களுக்கு காவியாக தெரியவில்லை. இப்படி மாற்றப்பட்டிருப்பதால் இப்பகுதியில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை’ என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...