அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எம்.ஜி.ஆர் ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கானது - பிரதமர் மோடி புகழாரம்!

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   26 , 2021  13:41:32 IST

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

”பட்டங்களைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். பட்டம் பெற்ற மாணவிகளுக்கு எனது கூடுதல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு துறையிலும்  பெண்கள் முன்னின்று வழிநடத்து மகிழ்ச்சியளிக்கிறது” என்றவர், உலக நாடுகளிலேயே இந்தியா தான் குறைவான கொரோனா இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், சுற்றுச்சூழல் விவகாரத்தில் இந்தியா நம்பகத்தன்மையுடன் இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ”எம்.ஜி.ஆரின் ஆட்சி ஏழைகள் மீது அக்கறை நிறைந்தது. சுகாதாரம், பெண் கல்வி மற்றும் அவர்களின் முன்னேற்றம் மீது அதிகம் கவனம் கொண்டிருந்தார். சில அண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் பிறந்த இலங்கைக்கு டிக் ஓயா மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன். இலங்கையில் உள்ள தமிழர்களில் மருத்துவத்திற்காக இந்தியா பணியாற்றுவதில் பெருமை கொள்கிறது” என்றார்.

மருத்துவம், பல்மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் பயின்ற 21, 889 பேர் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். மாணவர்களுக்கு பட்டங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கி சிறப்பித்தார்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...