???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2020  22:43:29 IST

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் திறக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லில் காவிரிக்கரையோர பகுதிகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதைத்தொடர்ந்து காவிரி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 625 அடியாக இருந்த நீர்வரத்து இன்று 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.44 அடியாகவும், நீர்இருப்பு 28.99 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...