???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி 0 கல்லைக் கட்டிக்கொண்டு எடப்பாடி கிணற்றில் இறங்கியுள்ளார்: டிடிவி தினகரன் 0 காலியானதாக அறிவிக்கப்பட்டது ஒசூர் தொகுதி 0 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடம் மாற்றி தமிழக அரசு உத்தரவு 0 விஜயகாந்த்தின் உடல்நலம் விசாரித்தார் பியூஷ் கோயல் 0 உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை! 0 அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 0 அதிமுக-வுடன் பணத்திற்காகவே பாமக கூட்டணி:மு.க.ஸ்டாலின் 0 பாஜக தலைவர் அமித் ஷா வருகை திடீர் ரத்து! 0 செயல்பாட்டாளர் முகிலன் மாயம்: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு 0 திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை 0 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை 0 ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராவதில் மீண்டும் விலக்கு கேட்டார் ஓ.பி.எஸ்.! 0 அமித்ஷா இன்று சென்னை வருகை! 0 பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்: தொலைத்தொடர்பு அமைச்சகம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேட்டூர் அணை நிரம்பியது:காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2018  00:59:07 IST

கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி அணை கடந்த 8 ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த உபரி நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று காலை அதிகபட்சமாக 80,000 கன அடியானது. கபினி அணை வரலாற்றில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
 
இதேபோல கர்நாடகாவில் உள்ள மற்றொரு அணையான கிருஷ்ணசாகர் அணையும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 63 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சத்து 40,000 கன அடி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 90,000 கன அடியாக அதிகரித்தது.
 
இதனால் அணையிலிருந்து 60,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 120 அடி உயரமுடைய மேட்டூர் அணையில் தற்போது 118.5 அடிநீர் உள்ளது. நீர்வரத்து அதிகமாக உள்ள நிலையில், அணை பிற்பகலில் நிரம்பும் எனத் தெரிகிறது. மேட்டூர் அணை கடந்த மாதம் 23 ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால், கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...