???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2020  21:59:47 IST

கா்நாடகத்தில் காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் மழை சற்று தணிந்துள்ளதால் இரு அணைகளுக்கும் நீா்வரத்து குறைந்துள்ளது.

இதனால், கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகா் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு  25,971 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கபினியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 5,600 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாகச் சரிந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி மாலை முதல் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை பிற்பகலில் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,000 கனஅடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்புக் குறைக்கப்பட்டாலும் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியை எட்டியது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...