???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் 0 கமல் ஊழலை திசை திருப்புகிறார்: திருமாவளவன் குற்றச்சாட்டு 0 பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன் 0 கமல்ஹாசனின் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் 0 சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு : 0 மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது : பிரேமலதா விஜயகாந்த் பேச்சு 0 பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் : ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளை மூட உத்தரவு 0 சசிகலாவுக்கு கூடுதல் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு: டி.ஐ.ஜி. ரூபா 0 இந்தியை அலுவல் மொழியானால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம்! 0 பக்கிங்காம் தடுப்பணையில் பராமரிப்பு இல்லை: உவர் நிலமாக மாறிய விவசாய நிலங்கள் 0 நாகையை சேர்ந்த மீனவர்களை சிறைபிடிப்பு: இலங்கை கடற்படையினர் அட்டூழியம். 0 தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்! 0 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.19ஆயிரம் கோடி கருப்புப் பணம்: ஜேட்லி 0 ஊழல் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்கள்: கமல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மாதவரம் - சிறுசேரிக்கு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   11 , 2017  05:28:41 IST


Andhimazhai Image

மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டமாக ரூ. 85,047 கோடி செலவில் மாதவரம் - சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

ரூ. 85 ஆயிரம் கோடி செலவில் 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

 

80 சதவீதம் சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் இந்த வழித்தடம் அமையும்.

 

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை இன்னும் வெகுவாக குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, பயண நேரமும் பாதியாகக் குறையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லைதான்.

 

கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரையில் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

 

திருமங்கலம்- நேருபூங்கா வரையில் 8 கி.மீட்டர் சுரங்க பாதையில் ரெயில் சேவை நடந்து வருகிறது.

 

இந்த இரண்டு தடங்களிலும் ரெயில் சேவைக்கு பொது மக்களிடம் பெரிதும் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.

 

மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டமாக ரூ. 85,047 கோடி செலவில் மாதவரம் - சிறுசேரிக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த வழித்தடபாதை 107 கி.மீட்டர் கொண்டதாகும். இதற்கான ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது. ரெயில் நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

 

இந்த வழித்தடத்தில் 80 சதவீதம் சுரங்க பாதையாகவும் 20 சதவீதம் உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

 

இந்த மெட்ரோ ரெயில் திட்ட வழித்தடபாதை மாதவரம் - சிறுசேரி, கோயம்பேடு- ஆயிரம் விளக்கு, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

 

இந்த வழித்தடம் மாதவரத்தில் மூன்று லைன் தண்டவாள பாதை கொண்டதாக அமையும்.

 

மத்திய- மாநில அரசுகளின் ஒப்புதல் அனுமதிக்காக இந்த திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் இப்பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...